2025 ஐ.பி.எல் தொடருக்காக மகேந்திர சிங் தோனியை சிஎஸ்கே அணி தக்கவைத்துள்ளது.
அடுத்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல்.தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியிலும் ஏராளமான மாற்றங்கள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில், மகேந்திர சிங் தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே, மதீஷா பத்திரனா ஆகியோரை தக்கவைத்துள்ளதாக சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.