கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் வார விடுமுறையொட்டி சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் விடுமுறை தினங்களில் பொதுமக்களின் வருகை அதிகரிப்பது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் ஞாயிறு விடுமுறையொட்டி திற்பரப்பு அருவிக்கு அதிகாலை
முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
மேலும், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவிக்கு வருகை தந்து குளித்து மகிழ்ந்தனர்.