விழுப்புரம் மாவட்டம் தீவனூரில் அமைந்துள்ள சுயம்பு பொய்யாமொழி விநாயகர் கோயிலில் புரட்டாசி மாத சங்கடஹர சதுர்த்தியையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதில், மூலவருக்கு பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், திராட்சை உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து ஊஞ்சல் உற்சவமும் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.