திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு பகுதியில் விவசாய நிலத்திற்கு சென்ற தந்தை மகன் உள்ளிட்ட 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
ஏலகிரி மலையடிவார பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வனவிலங்குகள் புகுவதால் மின்சார வேலி அமைக்கப்பட்டது.
இந்நிலையில் வனவிலங்கு வேட்டைக்காக விவசாய நிலத்திற்கு சென்ற சிங்காரம், அவரது மகன் லோகேஷ், கரிபிரான் ஆகிய 3 பேரும் மின்சார வேலியில் மிதித்ததில் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தகவலறிந்த சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.