தென்னாப்பிரிக்காவில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஜோகன்னஸ்பர்க், கிழக்கு கடற்கரை நகரமான டர்பன் உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக பனிப்பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக சாலைகள் உள்ளிட்ட பார்க்கும் இடமெல்லாம் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் காட்சியளிக்கிறது. இதனால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.