திருப்பதி கோயில் வருடாந்திர பிரமோற்சத்தையொட்டி, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.
திருப்பதி கோயில் வருடாந்திர பிரமோற்சவம் அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி, அமராவதியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்திரிகை மற்றும் பொன்னாடை அணிவித்து அழைப்பு விடுக்கப்பட்டது. திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில், வருடாந்திர பிரமோத்ஸவம் அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.