இலங்கை அதிபர் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டதால் முக்கிய பிரமுகர்கள் நாட்டை விட்டு தப்பியோடினர்.
இலங்கை முன்னாள் அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே இந்தியாவுக்கும், ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தாய்லாந்தின் பாங்காக் நகருக்கும் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தே கந்தாவை சேர்ந்த சத்தாதிஸ்ஸ தேரர் ஹாங்காங் சென்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
அதிபர் வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி லிமினி வினோஜா வீரசிங்க மற்றும் அவரது தந்தை திலகசிறி வீரசிங்க ஆகியோர் துபாய் தப்பியோடியதாக கூறப்படுகிறது.
கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு நேரடி விமான சேவை இல்லாததால், துபாய் வழியாக அவர்கள் அமெரிக்கா சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.