வைகை அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படும் நிலையில், பாசன கால்வாய்களில் யாரும் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை, திண்டுக்கல் மற்றும் சிவகங்கையில் நடைபெறும் விவசாய பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து 2 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதன் காரணமாக பாசன கால்வாய்களில் தண்ணீர் ததும்பியபடி வேகமாக செல்கிறது. இதனால் பொதுமக்கள் யாரும் கால்வாயில் இறங்க வேண்டாம் என பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.