செஸ் ஒலிம்பியாட் தொடரில் பிரக்ஞானந்தா, வைஷாலி தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாக தந்தை ரமேஷ் பாபு தெரிவித்துளளார்.
45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கம் வென்ற இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணியில் இடம்பெற்றிருந்த கிராண்ட் மாஸ்டர்கள் பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலியின் தந்தை ரமேஷ் பாபு நமது செய்தியாளர் நாகராஜன் பிரத்யேக பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது :
45 -வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் என் பிள்ளைகள் தங்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. மகாபலிபுரத்தில் நடைபெற்ற 44 வது செஸ் ஒலிம்பியாட் தொடரில் தங்கத்தை நழுவ விட்டது மிகவும் வருத்தமாக இருந்தது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த எனது பிள்ளைகள் தங்கம் வென்றுள்ளது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு.இது போன்ற வாய்ப்பு யாருக்கும் அமையாது, அதனை எங்களுக்கு கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி. தொடர்ந்து ரேட்டிங் புள்ளிகள் அதிகமாக பெற்று நிறைய சாதிக்க வேண்டும் என வேண்டுகிறேன் என ரமேஷ் பாபு தெரிவித்தார்.,