விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், புரட்டாசி மாத கிருத்திகையை ஒட்டி வெள்ளி மயில் வாகன உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அப்போது வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வண்ண மலர்களால் அங்கரிக்கப்பட்டு தங்கக்கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து வெள்ளி மயில் வாகன உற்சவமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.