காஞ்சிபுரம் அருகே உள்ள தேனம்பாக்கம் ஏரிக்கரையில், பனை விதை நடும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
தமிழகத்தின் மாநில மரமான பனைமரம், நீர் நிலைகளில் மண் அரிப்பை தடுத்து நீரை சேமிப்பதற்காக கரையோரங்களில் நட்டு வைக்கப்படுகிறது.
அந்த வகையில், தேனம்ப்பாக்கம் கிராமத்திலுள்ள ஏரியில் 5 ஆயிரம் பனை விதை நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சார்லஸ் சாம் ராஜதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.