பஞ்சாப் மாநிலம், பதிண்டா பகுதியில் ரயில் தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகளை போலீசார் கைப்பற்றினர்.
பதிண்டா-டெல்லி ரயில் பாதையில் ரயில்வே போலீசார் ரோந்து சென்றபோது தண்டவாளத்தில் இரும்பு கம்பிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து, கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொண்டு எச்சரிக்கை விடுத்த ரயில்வே போலீசார், தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த 9 இரும்பு கம்பிகளை அகற்றினர்.
மேலும், தண்டவாளத்தில் இரும்பு கம்பிகளை வைத்து சென்ற அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.