தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 12 அடி நீள அரிய வகை ராஜநாகத்தை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
குற்றாலத்தில் இருந்து ஐந்தருவிக்கு செல்லும் சாலையில் தமிழக சுற்றுலாத்துறை கட்டுப்பாட்டில் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள வீட்டின் அருகே பெரிய அளவிலான பாம்பு புகுந்ததாக தீயணைப்பு துறைக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி சுமார் 12 அடி நீளமுள்ள அரிய வகை ராஜ நாகத்தை லாவகமாக பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்து காட்டிற்குள் விட்டனர்.