சர்வதேச விண்வெளி நிலைய கமாண்டராக சுனிதா வில்லியம்ஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த ஜூன் மாதம் 8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சக நாசா விண்வெளி வீரர் ஒருவருடன் சுனிதா வில்லியம்ஸ் பயணித்தார். பின்னர், அவர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலைய கமாண்டராக பொறுப்பு வகித்த ரஷ்யா விண்வெளி வீரர் பூமிக்கு திரும்பியதால், அந்தப் பொறுப்பை சுனிதா வில்லியம்ஸ் ஏற்றுக்கொண்டார். பிப்ரவரியில் அவர் பூமிக்கு திரும்பவுள்ள சூழலில், சர்வதேச விண்வெளி நிலைய கமாண்டராக பொறுப்பேற்றது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.