பழங்குடியின தலைவர்களை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி அவமதித்ததாக பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா குற்றஞ்சாட்டி உள்ளார்.
ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், குந்தி பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார்.
அப்போது பழங்குடியின மக்களின் பாதுகாப்பு குறித்து பேசும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, அதே இனத்தைச் சேர்ந்த சம்பாய் சோரன், சீதா சோரன் ஆகியோரை அவமதித்ததாக ஜெ.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
பழங்குடியின மக்களின் நலனை பாஜகவால் மட்டுமே காக்க முடியும் என்று கூறிய அவர், பழங்குடியின தியாகிகளின் பிறப்பிடத்துக்குச் சென்ற ஒரே பிரதமர் மோடி என, ஜெ.பி.நட்டா குறிப்பிட்டார்.