கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் ஜீரோ பாயிண்ட் வழியாக பூண்டி நீர்த்தேக்கத்தை வந்தடைந்தது.
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தமிழகம்-ஆந்திரா நதிநீர் ஒப்பந்தப்படி ஆண்டுதோறும் தமிழகத்திற்கு ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 7 டி.எம்.சி.யும் தண்ணீர் திறக்கப்படுகிறது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் கிருஷ்ணா தண்ணீர் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் வினாடிக்கு 500 கன அடி வீதம் கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை வந்தடைந்தபோது அதிகாரிகள் மலர்தூவி வரவேற்றனர்.
இந்நிலையில், தாமரைபாக்கம் ஜீரோ பாயிண்ட்டில் இருந்து பூண்டி நீர்த்தேக்கத்திற்கு கிருஷ்ணா நதி நீர் வந்தடைந்தது. வழி நெடுகிலும் கிருஷ்ணா நதி நீர் கால்வாயில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டுள்ளதால் நீர்வரத்தின் வேகம் குறைந்துள்ளதாகவும், கால்வாய்யை சீரமைக்கும் பணி நடைபெற்ற வருவதாகவும் பொதுப்பணித்தறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.