மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் உறுதி என ஜெயங்கொண்டம் போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் தலைமையிலான போக்குவரத்து போலீசார், வேலாயுத நகர் பள்ளி வளாகம் முன்பு வாகனங்களை நிறுத்தி தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது குடி போதையில் வாகனங்களை ஓட்டினால் அபராத தொகை வசூலிக்கப்படும் என்றும், எந்த சிபாரிசும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.