திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் கோயில் முன்பு தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி சத்தியம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக வெளியான அறிக்கை நாடு முழுவதும் உள்ள பக்தர்களிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மத்திய அரசு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், திருப்பதி கோயில் குளத்தில் மூழ்கி ஈர உடையுடன் வந்த முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி, லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யவில்லை என தெரிவித்தார்.
கோயில் எதிரே தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்தார். அப்போது அங்கிருந்த போலீசார் அவரை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.