சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வடிவுடையம்மன் கோயிலில் அடுத்த மாதம் 3-ம் தேதி நவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது.
இந்நிலையில் விழாவையொட்டி கோயிலின் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.