லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகம் முன்பு இந்து சாது பரிஷத் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக வெளியான ஆய்வறிக்கை நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. திருப்பதி பிரசாத விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், திருமலை தேவஸ்தான நிர்வாக அலுவலகம் முன்பு இந்து சாது பரிஷத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
லட்டில் கலப்படம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.