சிறு வயது முதலே சனாதன தர்மத்தை பின்பற்றி வருவதாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் லட்டு பிரசாத நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரத்தில், கடந்த ஜெகன் மோகன் ஆட்சிக்கு கண்டனம் தெரிவித்தும், ஏழுமலையானிடம் மன்னிப்பு கோரும் விதமாகவும், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாள் விரதத்தை தொடங்கியுள்ளார்.
குண்டூர் மாவட்டத்தில் உள்ள தசாவதார பெருமாள் கோயிலில் மாலை அணிந்து விரதத்தை தொடங்கியுள்ள பவன் கல்யாண் 3ஆம் நாள் விரதத்தில் விஜயவாடாவில் கனக துர்க்கை கோயிலில் தூய்மை பணியை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், சிறு வயது முதலே சனாதன தர்மத்தை பின்பற்றி வருவதாகவும், இந்துவாகவும், ராமனின் பக்தனாகவும் இருப்பதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.