ஆடம்பர கார் விரும்பிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஒட்டுமொத்த சொகுசு கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி சென்னை அடுத்த நீலாங்கரையில் நடைபெற்றது. கண்காட்சியில் பங்கேற்ற ஆடம்பர கார்கள் குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
மிகப் பெரும் செல்வந்தர்கள், கோடீஸ்வரர்கள் மற்றும் பணக்காரர்களால் பல லட்சங்கள், கோடிகள் கொடுத்து வாங்கப்படும் ஆடம்பரக் கார்கள் அவ்வப்போது சென்னையின் பிரதான சாலைகளை அலங்கரிப்பது உண்டு.
ஆடம்பரக் கார்களை ஆர்வத்துடன் பார்வையிடும் பொதுமக்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஏராளமான சொகுசு கார்களை கொண்டு கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தது மெட்ராஸ் ட்ரைவன் எனும் தனியார் அமைப்பு.
பி.எம்.டபிள்யு, ஆடி, ஜாகுவார், பென்ஸ் என ஆடம்பரக் கார்களின் அனைத்து ரகங்களின் அணிவகுப்பையும் ஒரே இடத்தில் காண்பதற்கான அமைந்த இந்த வாய்ப்பு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அதே நேரத்தில் என்ன தான் ஆடம்பரக் கார்களாக இருந்தாலும் அதிக வேகத்திற்கும் அதிக சத்தத்திற்கும் அனுமதியில்லை என்பதில் உறுதியாக இருந்ததாக கூறுகிறார்கள் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள்
ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆடம்பரக் கார்களை சிறியவர்கள் முதல் பெரியவர்களை கண்டு ரசித்ததோடு, அக்கார்களின் தனித்துவமான அம்சங்களையும், இயந்திர செயல்பாடுகளையும் கேட்டுத் தெரிந்து கொண்டனர்
ஆடம்பர கார் கண்காட்சியில் அணிவகுத்த கார்களை இயக்கியவர்களில் பெரும்பாலானோர் ஆண்களாக இருந்த நிலையில், ஒற்றைப் பெண்ணாக சொகுசு காரை இயக்கி அனைவரையும் கவனத்தை ஈர்த்தார் யுவஸ்ரீ
விறுவிறுப்பான சென்னையில் அவ்வப்போது ஆடம்பர கார்களை கண்டு ரசிக்கும் கார் விரும்பிகளுக்கு, ஒரே ஒடத்தில் ஒட்டுமொத்த கார்களும் அணிவகுத்து நின்றது புதுவிதமான அனுபவத்தை அளித்துள்ளது.