எம்.சாண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
தேனி மாவட்ட கல்குவாரிகளிலிருந்து, அண்டை மாநிலமான கேரளாவிற்கு எம்.சாண்ட் மற்றும் ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருட்கள் டிப்பர் லாரி மூலம் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் குவாரி உரிமையாளர்கள் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் விலையை உயர்த்தியுள்ளனர். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த டிப்பர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் விலையை குறைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.