நவீன இந்தியா பொறியாளர்களின் பங்களிப்பால் கட்டமைக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் தெரிவித்துள்ளார்.
திருவேட்டக்குடி புதுச்சேரி தேசிய தொழில் நுட்ப கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் துணை நிலை ஆளுநர் கைலாசநாதன் சிறப்பு விருந்தினராக கொண்டு 230 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதனைதொடர்ந்து பேசிய அவர், நவீன இந்தியா பொறியாளர்களின் பங்களிப்பால் கட்டமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மத்திய அரசு இந்த ஆண்டு உயர்கல்வித்துறைக்கு 47 ஆயிரத்து 619 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், அதில் என்ஐடிகளுக்கு 5 ஆயிரத்து 40 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.