திரௌபதி பட இயக்குனர் மோகன் கைது செய்யப்பட்டிருக்கும் விதம் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானது என பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், திரௌபதி பட இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ள விதம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என குறிப்பிட்டுள்ளார்.
மோகன்கைது செய்யப்பட்டதற்கான காரணம் அவருக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ தெரிவிக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், மோகன் கைது செய்யப்பட்டிருக்கும் விதம் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு விரோதமானது என தெரிவித்துள்ளார்.