தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு ஊராட்சியில் மயானத்திற்கு செல்ல புதிய சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சீர்காழி அருகே உள்ள திருவெண்காடு ஊராட்சியில் இறந்தவர்களின் உடலை மயானத்திற்கு எடுத்துச்செல்ல வழியில்லாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதனால் இறந்தவரின் உடலை வாய்க்கால் வழியாக மயானத்திற்கு கொண்டு செல்லும் அவலநிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர்.
இதுகுறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்நிலையில், தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக திருவெண்காடு ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து மயானம் செல்வதற்கு உரிய சாலை அமைக்கவும் , வாய்க்காலில் புதிய பாலம் கட்டவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.