நள்ளிரவு பணகுடி காவல் நிலையத்தை முற்றுகையிட்ட திருநங்கைகள் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டினர்.
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள், இரவு நேரங்களில் சாலைகளில் செல்வோரிடம் பாலியல் தொழில் ஈடுப்படுவதாகவும், அத்துமீறலில் ஈடுபட்டு பணம் பறிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
நெல்லை மாவட்ட எல்லையில் உள்ள காவல்கிணறு பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு இரவில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரிடம் அத்துமீறிய திருநங்கைகள், அவரிடம் பணத்தை பறித்ததாக பதியப்பட்ட வழக்கில் 2 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர்.
இருப்பினும், காவல்கிணறு பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு தொடர்ந்து தொந்தரவு அளித்து வந்த திருநங்கைகளை போலீசார் நேரில் சென்று எச்சரித்தனர். இதனால், ஆத்திரமடைந்த 40க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பணகுடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காவலர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.
இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்த காவலரை கீழே தள்ளி, கற்களால் தாக்கி முயன்ற திருநங்கைகளை போலீசார் விரட்டியடித்தனர்.