வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே மெக்கானிக் ஒருவர், 41 கார்களை திருடி, அதன் உதிரி பாகங்களை பிரித்து விற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகர் பகுதியை சேர்ந்த தேவா கார் மெக்கானிக் ஷேட் வைத்துள்ளார். இந்நிலையில் இவர், நகர் பகுதிகளிலிருந்து காரை திருடி வந்து இரவோடு இரவாக பிரித்து உதிரி பாகங்களை விற்றதாக கூறப்படுகிறது.
இது குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், கார் மெக்கானிக் ஷேட்டை சோதனை செய்தனர். அப்போது உரிய ஆவணங்களின்றி கார்கள் ஷெட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மெக்கானிக் தேவாவை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.