லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
காசா போரில், பாலஸ்தீன ஹமாஸுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் லெபனான் நாட்டைச் சேர்ந்த ஹிஸ்புல்லா ஆயுதக் குழு, வடக்கு இஸ்ரேல் பகுதியில் ராக்கெட்டுகளை வீசி தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
இந்நிலையில், ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவுக்கு எதிராக லெபனானில், இஸ்ரேல் பாதுகாப்பு படை வான்வழித் தாக்குதல்களை நிகழ்த்தி வருகிறது.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹிஸ்புல்லாக்களின் ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்த இஸ்ரேல் விமானப் படைகள் முனைப்பு காட்டியது.
அதன்படி லெபனான் மீது இஸ்ரேல் விமானப் படைகள் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 550-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.