வங்கதேசத்தில் துர்கா பூஜை நடத்த இந்து அமைப்பினர் பணம் தர வேண்டும் என மிரட்டப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையிலான பந்தல்கள் நடப்பாண்டு அமைக்கப்பட உள்ளது என இந்து அமைப்புகள் தெரிவித்தன.
இந்நிலையில் துர்கா பூஜை கொண்டாட உள்ள இந்து அமைப்பினர் 5 லட்சம் ரூபாய் பணம் தராவிட்டால் பூஜை நடத்த முடியாது என மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் வங்கதேச அரசு தெரிவித்துள்ளது.