ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் ராமர் கோயில் தேருக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஹனகனஹல் கிராமத்தில் உள்ள ராமர் கோயில் தேருக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துள்ளனர். இது குறித்து கிராம மக்கள் புகார் அளித்த நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார், 4 தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.