தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 2 ஆயிரத்து 500 கன அடியில் இருந்து 5 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக நீர்வரத்து கடுமையாக சரிந்துவந்த நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மேலும் நீர்வரத்து உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது