சென்னையில் கள்ளத்தனமாக ஆட்டோவில் மது விற்பனை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கோயம்பேடு திருவீதி அம்மன் தெருவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த நபர் மற்றும் பெண்ணை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இருவரும் ஆட்டோவில் வைத்து மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சரவணன் என்ற ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த போலீசார், தப்பியோடிய பெண்ணை தேடி வருகின்றனர்.