கன்னியாகுமரியில் செயல்படும் மணல் ஆலையால் புற்று நோய் ஏற்படும் என காங்கிரஸ் கட்சியினர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் பாஜக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், மணவாளக்குறிச்சியில் மத்திய அரசுக்கு சொந்தமான மணல் ஆலை காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என தெரிவித்தார்.
இந்த சூழலில், உள்ளூரில் யாருக்கும் வேலை கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தில், அந்த ஆலையின் விரிவாக்கப் பணிக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.