சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் பணிபுரியும் ஊழியரை தாக்கிய 3 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேரு பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் தனது காதலியுடன் அநாகரிகமான முறையில் ரீல்ஸ் எடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த மெட்ரோ ரயில் நிலைய ஊழியர், இங்கு வீடியோ எடுக்ககூடாது என கூறியுள்ளார்.
இதையடுத்து ஊழியருக்கும், கல்லூரி மாணவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர், தனது நண்பர்கள் 2 பேரை அழைத்து வந்து மெட்ரோ ரயில் ஊழியரை தாக்கியுள்ளார்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், 3 மாணவர்களையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 3 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.