திருப்பதி லட்டு விவகாரத்தில், வரும் 28-ஆம் தேதி ஆந்திரா முழுவதும் கோயில்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் பரிகார பூஜை நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்படவில்லை என்றும்,
அரசியல் நோக்கத்தில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுமென்றே குற்றஞ்சாட்டியதாகவும் ஜெகன்மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
இதனால் அவரது பாவத்தைப் போக்க வரும் 28-ஆம் தேதி ஆந்திரா முழுவதும் கோயில்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் பரிகார பூஜை நடத்தப்படும் என்றும்,
இதில் பொதுமக்கள் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றும் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்துள்ளார்.