லெபனானில் தரைவழி தாக்குதலை தொடங்கும்படி இஸ்ரேல் ராணுவ தளபதி ஹலேவி உத்தரவிட்டார்.
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த ஆண்டு தாக்குதல் நடத்தினர். ஹமாசுக்கு ஆதரவாக, இஸ்ரேலின் அண்டை நாடான லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரும் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.
இதற்கு முடிவு கட்ட இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பினர் மீது நேரடி தாக்குதலில் இறங்கியது. உளவு அமைப்பினர் உதவியுடன் பேஜர்கள் வாக்கிடாக்கிகளை வெடிக்க செய்தது.
தொடர்ந்து, லெபனான் நாட்டில் பதுங்கியுள்ள ஹிஸ்புல்லா படையினர் மீது கடந்த 24ம் தேதி முதல் வான்வழி தாக்குதலையும் இஸ்ரேல் ராணுவம் ஆரம்பித்துள்ளது. மூன்று நாளாக நடக்கும் இந்த தாக்குதலில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தயார்படுத்துமாறு படையினருக்கு இஸ்ரேல் ராணுவ தளபதி ஹலேவி உத்தரவிட்டுள்ளார்.