சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவுக்கு, மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி. பெயர் சூட்டப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தனது குரலால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பாடகர் எஸ்பிபி கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி உயிரிழந்தார். இவரது மறைவையடுத்து அவர் வாழ்ந்த பகுதிக்கு அவரது பெயரை வைக்க எஸ்.பி.பி.யின் மகன் எஸ்.பி.பி.சரண் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அந்த கோரிக்கையை ஏற்று எஸ்பிபி வாழ்ந்த நுங்கம்பாக்கம் காம்தார் நகர் முதல் தெருவுக்கு அவரது பெயர் சூட்டப்படும் என, முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.