சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது.
தூக்கனாம்பட்டியில் செயல்பட்டுவரும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம், வாகன தகுதி சான்று உள்ளிட்ட தேவைகளுக்காக வரும் நபர்களிடம் இடைத்தரகர்கள் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன்பேரில் மாறுவேடத்தில் அலுவலகத்துக்குள் நுழைந்த அதிகாரிகள், இடைத்தரகர்களை அலுவலகத்துக்குள் வைத்து பூட்டினர்.
பின்னர் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத சுமார் 1 லட்சத்து 30 ஆயிரத்து 60 ரூபாய் கைபற்றப்பட்டது. சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைபற்றினர்.