வேலூர் மாநகராட்சி மேயரின் ஆதரவாளர்கள் தாக்கியதில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
கொணவட்டம் காமராஜர் தெருவை சேர்ந்த நித்தியானந்தம் என்பவரது வீட்டுக்கு எதிரே மாநகராட்சி மேயர் சுஜாதாவின் தாய் மகேஷ்வரியின் வீடு அமைந்துள்ளது.
சாலையின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய்கள் உள்ள நிலையில், மகேஷ்வரியின் வீட்டு வாசலில் கழிவுநீர் கால்வாயை நிரந்தரமாக மூடி, சாலை அமைக்கும் பணிகள் தொடங்கின. இதனால் நித்தியானந்தத்தின் வீட்டின் வாசல் சேதமடைந்துள்ளது. ஆகவே, இதுகுறித்து கேள்வி எழுப்பிய அவரை மேயர் சுஜாதாவின் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கினர்.
இதில் நித்தியானந்தத்துக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.