ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் ராஜராஜசோழன் காலத்திலான ஈழக்காசை பள்ளி மாணவிகள் கண்டெடுத்தனர்.
திருப்புல்லாணியை சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவிகள் வீட்டின் முன்பு மண்ணில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பழமையாக காசு ஒன்றை கண்டெடுத்தனர். அதனை மாவட்ட தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுருவிடம் மாணவிகள் ஒப்படைத்தனர்.
அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் நடைபெற்ற கள ஆய்வில் சீனநாட்டு போர்சலின் ஓடு, இரும்புத் தாதுக்கள், இரும்புக் கசடுகள் உள்ளிட்டவையும் கண்டெடுக்கப்பட்டன. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ராஜகுரு, மாணவிகள் கண்டெடுத்தது முதலாம் ராஜராஜசோழன் பெயர் பொறித்த ஈழக்காசு எனத் தெரிவித்தார்.