தேனி அருகே புதிதாக திறக்கப்பட்ட நகை கடையில் பின்பக்க சுவரில் துளையிட்டு திருட முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
டி.சுப்புலாபுரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே தங்க நகை கடை வைத்துள்ளார். நள்ளிரவில் கடையின் பின்பக்க சுவரில் மர்ம நபர்கள் துளையிட்டு கொண்டிருந்தனர்.
இதனால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால் அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.