வளர்ந்த பாரதத்தை உருவாக்கும் நோக்கத்துடன் பிரதமர் மோடி 3.0 ஆட்சியின் முதல் 100 நாட்களில் 15,000 க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது :
நாட்டில் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறார்.
நமது மக்கள்தொகை ஈவுத்தொகை நமது நாட்டின் மிகப்பெரிய பலங்களில் ஒன்றாகும் என்றும், வளர்ந்த பாரதம் என்ற இலக்கை அடைய தேச கட்டமைப்பில் இளைஞர்களின் திறமை முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு இந்திய அரசு மிக உயர்ந்த முன்னுரிமை அளித்து வருகிறது என்றும் பிரதமர் எப்போதும் கருதுகிறார்.
தற்போதைய அரசின் மூன்றாவது பதவிக்காலத்தின் முதல் 100 நாட்கள், பல முக்கிய முன்முயற்சிகள் மற்றும் முடிவுகளால் குறிக்கப்பட்டுள்ளன, அவை மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன மற்றும் வளர்ந்த பாரதம் 2047 க்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன.
ஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினர், தலித்கள், ஆதிவாசிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகியோரின் வாழ்க்கையை எளிதாக்கி வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் குடிமக்களை மையமாகக் கொண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
100 நாட்களில், 15,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு மத்திய அமைச்சகங்கள் மற்றும் துறைகளால் அரசு வேலைகளுக்கு நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய நியமனங்கள் பல்வேறு பதவிகள் மற்றும் குழுக்களை உள்ளடக்கியது,
புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் ஐகாட் கர்மயோகி தளத்தில் மின்-கற்றல் தொகுதியான “கர்மயோகி பிரரம்ப்” மூலம் தங்களைப் பயிற்றுவிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள், அங்கு 1200 க்கும் மேற்பட்ட உயர்தர மின்-கற்றல் படிப்புகள் ‘எங்கும் எந்த சாதனத்திலும்’ கற்றல் வடிவத்திற்கு கிடைக்கின்றன.
குடிமக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, 2020 செப்டம்பரில் தொடங்கப்பட்ட கர்மயோகி இயக்கம் என்ற வலைத்தளத்தில் இதுவரை 43 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்மயோகிகள் இணைந்துள்ளனர்.