புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இலங்கை அதிபர் அனுரகுமார திஸாநாயக்கவின் ஆட்சி இன்னும் மோசமாக இருக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது :
தேசியமக்கள் சக்தியின் கூட்டணியில் அனுராக் திசநாயக் அதிபர் தேர்வு செய்யபட்டுள்ளார். இவர் சிங்களர்களையும் தமிழர்களையும் இனைத்து செயல்படுவேன் என கூறினாலும் இலங்கை வாழ் தமிழர்களுக்கு நன்மை கிடைக்கபோவதில்லை என்றும் ஜனதாமுக்தி சிங்கள பேரினத்தின் தலைவராக தற்போதைய அதிபர் இருந்துள்ளார்.
அவர் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஊக்குவித்தவர் இடது சாரி இயக்கம் என்று கூறிகொண்டாலும் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டவர் என்பதால் தமிழர்களுக்கு எதிரான மனநிலை கொண்ட திசநாயக் அரசு ஒன்னரை லட்சம் தமிழர்களுக்கு நீதி பெற்று தர எதுவும் செய்யமாட்டார் என கூறினார்,
தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு கானுதல், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் பாதுகாப்பை நிலைநிறுத்துதல், ஈழத்தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காணுதல், போர் குற்றங்களுக்கு தண்டித்தல் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு இந்திய அரசு வெளியுறவுக்கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தமிழகத்தில் மதுவிலக்கை கொண்டுவர மத்திய அரசை கைகாட்ட கூடாது என்றும் மதுவிலக்கு என்பது மாநில பட்டியலில் உள்ளது மதுகடை திறப்பது மூடுவது போன்ற அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளதாகவும் அவர் கூறினார்.