இந்து சமய அறநிலையத்துறை, கோயில்களை முறையாக பராமரிப்பதில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிருப்தி தெரிவித்துள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலின் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்பக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், போதிய வருவாய் கிடைத்தும் கோயில் பராமரிப்பு, பணியிட நியமனம் போன்றவற்றில் இந்துசமய அறநிலையத்துறை கவனம் செலுத்துவதில்லை என குற்றம் சாட்டப்பட்டடது.
இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன் விசாரணைக்கு வந்த நிலையில், கோயில் பணியாளர்களின் எண்ணிக்கை எவ்வளவு?, கோயிலின் ஆண்டு வருமானம் என்ன?, வருமான தொகை எவ்வாறு செலவு செய்யப்படுகிறது? என அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.
மேலும், இந்து சமய அறநிலையத்துறை, கோயில்களை முறையாக பராமரிப்பது இல்லை என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ராமநாதசுவாமி கோயிலின் செயல் அலுவலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.