சென்னை துறைமுகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த 112 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த சரக்குப்பெட்டி ஒன்றை சென்னை துறைமுகத்தில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெட்டிக்கு அடிப்பகுதியில் தலா 3 கிலோ சூடோ எபிட்ரின் என்ற போதைப்பொருள் கொண்ட 37 பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சுமார் 112 கிலோ போதைப்பொருளை பறிமுதல் செய்த போலீசார் இருவரை கைது செய்தனர். மேலும், குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட 2 சொகுசு கார்கள், 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.