ஊடகம், சமூகம் மற்றும் கல்விப் பணிகளில் சி.பா.ஆதித்தனார் சிறந்து விளங்கியதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், ஊடகத் துறையின் முன்னோடிகளில் ஒருவரும், தமிழக அமைச்சராகவும், சட்டப் பேரவைத் தலைவராகவும் சீரிய மக்கள் பணி மேற்கொண்டவருமான, ஐயா அமரர் சி.பா.ஆதித்தனார் அவர்களது பிறந்த தினம் இன்று.
அரசியல் மட்டுமல்லாது சமூகம் மற்றும் கல்விப் பணிகளிலும் சிறந்து விளங்கியவர். தமிழ்ப் பற்றும், தேசப் பற்றும் மிகுந்தவர். ஐயா அமரர் சி.பா.ஆதித்தனார் அவர்களது புகழைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை கூறியுள்ளார்.