லெபனான் நாட்டில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீடியோ வெளியிட்டுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும், இஸ்ரேல் பாதுகாப்பு படையினருக்கும் இடையேயான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளது.
அதில் லெபனானுக்குள் ஹிஸ்புல்லா அமைப்பினர் மக்கள் வசிக்கும் பகுதியில் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா தளபதியின் இருப்பிடத்தை இஸ்ரேல் குண்டுவீசித் தாக்கியுள்ளது. இது ஒரே வாரத்தில் ஹிஸ்புல்லா தளபதிகளை குறிவைத்து நடத்தப்படும் நான்காவது தாக்குதல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கிவிட்டது. இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் நடத்திய சரமாரி தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.