திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே திமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குன்னம்பட்டியை சேர்ந்த மாசி, திமுக தெற்கு ஒன்றிய பொருளாளராக பதவி வகித்து வந்தார். கவுண்டம்பட்டியில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்ற மாசி இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள், அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனையடுத்து தப்பியோட முயன்ற அவரை துரத்திச் சென்ற மர்ம கும்பல் மீண்டும் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.
இதில் மாசி சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.