நடப்பாண்டிற்குள் 100 வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஐஐடி மெட்ராஸ் உருவாக்கும் என அதன் இயக்குநர் காமகோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் ஐஐடி மெட்ராஸ் நடத்தும் நிர்மாண் செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் மாணவர்களின் ஸ்டார்ட்அப் கண்டுபிடிப்புகள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காமகோடி, மாணவர்களை தொழில் முனைவோர்களாக மாற்றுவதற்காக இந்த நிர்மாண் செயல் விளக்க கூட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். நடப்பாண்டிற்குள் 100 வெற்றிகரமான ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஐஐடி மெட்ராஸ் உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.